வடதமிழக கடலோரத்தில் ஸ்டே ஆகும் காற்றழுத்தம்! இந்த வாரம் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! வெதர்மேன்
சென்னை: வடதமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இந்த வாரம் நல்லதொரு செய்தி காத்திருக்கிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது கோவை மற்றும் உள்மாவட்டங்களுக்கு தொலைவில் இருக்கிறது. ஒரு வேளை காற்றழுத்தமானது கடலோர பகுதியை கடந்து தமிழகத்திற்கு வந்தால் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே தற்போது கடலோர மாவட்டங்கள், கடலோரத்திற்கு அருகே இருக்கும் மாவட்டங்களுக்கு மட்டுமே மழை பெய்யும். தென் தமிழகத்தை பொருத்தமட்டில் ராமநாதபுரம் வரை நல்ல மழை பெய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
காற்றழுத்தம் எந்த பக்கம் கடக்கிறது என்பதை பார்ப்போம். காற்றழுத்தமானது இலங்கை அருகே கடக்காது. இதற்கு என்ன காரணம் என்றால் இலங்கையில் கரடுமுரடான மலைகள் இருப்பதால் பொதுவாகவே காற்றழுத்தங்களும் புயல்களும் இலங்கையை கடப்பதை தவிர்த்துவிடும்.
எனவே டெல்டா முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடற்கரை பகுதியை நோக்கித்தான் வரும். அந்த வகையில் தற்போது நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்தமும் அப்படித்தான். ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த நேரத்தில் காற்று ஒரு பிரச்சினையாகவே இருக்காது. மழைதான் அச்சுறுத்தலாக இருக்கும். எனவே தென்னை மரங்களின் கிளைகளை வெட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
வடதமிழக கடலோரத்தை நோக்கியே காற்றழுத்தம் நிலை கொள்ளவுள்ளதால் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வடதமிழக கடலோர பகுதிகளில் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
பள்ளி குழந்தைகளுக்கு இந்த வாரத்தில் நற்செய்தி காத்திருக்கிறது. என்றாவது ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொடங்கிவிடும்.
அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகளில், கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தற்போது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தற்போது மெதுவாக நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு, அதாவது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை தொடங்கும். நல்ல மேகக் கூட்டங்கள் அந்த மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யும். நாளை முதல் சென்னையில் மழை வெளுக்கும். டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications