தருமபுரி, திருப்பத்தூருக்கு புயலா? ரொம்ப ரேர்! கனமழையால் விக்கித்த விக்கிரவாண்டி! வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கெல்லாம் புயல் பயணிக்கிறது என்றும் செல்லும் வழியெங்கும் கனமழையை கொடுக்க போகிறது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாக இந்த புயல் கடக்கும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த மேகக் கூட்டங்கள் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூரின் தெற்கு பகுதிகளுக்கு செல்லும். அங்கிருந்து தருமபுரிக்கும் பிறகு கர்நாடகாவுக்கும் செல்கிறது.

cyclone fengal weather chennai rains tamil nadu

எனவே இது கடந்து செல்லும் பாதைகளில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அது போல் அவருடைய முந்தைய பதிவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயலானது ஒரு வழியாக கடலில் இருந்து நகரத் தொடங்கியுள்ளது. விழுப்புரத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் இருக்கிறது. புயலின் தென்மேற்கு பகுதியில் மட்டும் தற்போது மேக கூட்டங்கள் இருக்கின்றன.

இந்த புயல் மேற்கு திசையை நோக்கி நகரும் போது மேற்கு பக்கம் சென்றுவிடும். மேற்கு வடமேற்கு வழித்தடத்தில் பெஞ்சல் பயணிக்க போகிறது. அதாவது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு வழியாக சென்று மழை பொழிவை கொடுக்கும்.

அது போல் மைசூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும். கோவை மாவட்டத்தை போகும் போது லேசாக டச் செய்து விட்டு செல்லும். அங்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர வழக்கமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது சிறிய மழை விட்டுவிட்டு பெய்யும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நிலைகளை அடைந்து நவம்பர் 29ஆம் தேதி பெஞ்சல் புயலாக மாறியது. இது நவம்பர் 30ஆம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

இந்த புயல் உருவாவதில் இருந்தே ஆட்டம் காட்டி வந்தது. இந்த நிலையில் இந்த புயல் இன்றுதான் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. பிறகு நேற்று மாலையே கரையை கடக்க தொடங்கியது. இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.

புயல் கரையை கடந்ததும் பலத்த சூறைக் காற்று வீசியது. இந்த புயல் புதுவை அருகே நகராமல் உட்கார்ந்திருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை அதிலும் வலுக்குறையாமல் இருப்பதால் சற்று அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் புயலானது மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வடகடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+