Kathiri Veyil தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கத்திரி வெயிலே இருக்காது! நோ வெப்பம்! ஏசியே வேண்டாமே!
சென்னை: நாளை கத்திரி வெயில் தொடங்குவதால் வெயில் எப்படி வாட்டி வதைக்குமோ என கவலை கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கத்திரி இல்லாத வெயிலே தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை கணிசமாக குறைந்து மழையால் தமிழகத்தில் வெப்பம் குறையும். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கும். ஆனாலும் உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவ்வப்போது மழை பெய்து தமிழகத்தில் வெயிலை குறைத்ததால் ஏப்ரல் நல்ல மாதமாகும். வேலூரில் வெப்பநிலை 39 டிகிரியிலிருந்து 40 டிகிரி வரை இருக்கும். மழையும் அவ்வப்போது பெய்யும்.
வேலூர்- கரூர்- ஈரோடு- மதுரை ஆகிய மாவட்டங்களில் 39 அல்லது 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இன்று இருக்கும். அது போல் சென்னையின் மீனம்பாக்கத்தில் 37 முதல் 38 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும்.
அது போல் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பெங்களூரிலும் மழை பெய்ய மிக மகி அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் எந்த தடங்கலும் இருக்காது
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் அரிதாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்றைய தினம் கரூர் 40 டிகிரியும், வேலூரில் 39.3 டிகிரியும், ஈரோடு 39.2 டிகிரியும் திருச்சி 39.1 டிகிரியும், சேலம் 38.2 டிகிரியும் மதுரை விமான நிலையம் 38.2 டிகிரியும், சென்னை விமான நிலையம் 38.1 டிகிரியும், திருத்தணி 38 டிகிரியும் வெப்பநிலை இருக்கும்.
கரூர், வேலூரில் வெப்பநிலை 40 டிகிரியாக இருக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே கரூரில் 44 டிகிரி வெப்பநிலை இருந்தது என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. இது 25 நாட்களுக்கு நீடிக்கும். அதாவது மே 28ஆம் தேதி வரை இருக்கும். இந்த கத்திரியில் கடும் வெயில் இருக்கும் என்பதால் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யும் என வெதர்மேன் கூறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!












Click it and Unblock the Notifications