‛‛தமிழகமே ஊட்டியாக மாறப்போகுது’’.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.. குளுகுளு வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ள அறிவிப்பில், "முதல் நாளான இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை மலைப்பகுதி, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் நாளான நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாம் நாளான 19ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
4ம் நாளான 20ம் தேதி 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அன்றைய தினம், திருநெல்வேலியின் மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
5ம் நாளான 21ம் தேதி, 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மற்றும் தேனிக்கு ஆர்ஞ்சு அலர்ட்டும், குமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கலுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர 17-21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications