சென்னையில் அடுத்த 3 மணி நேரம் மழை வெளுக்க போகுது.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதேபோல, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருபத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை மழை தொடரவுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தின் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 120 மி.மீ. மழை நேற்று காலை வரை பதிவாகியிருந்தது. ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் - 110 மி.மீ., அடையாறு -100 மி.மீ., பள்ளிக்கரணை, கண்ணகிநகா், மேடவாக்கம் - 90 மி.மீ., சைதாப்பேட்டை, நீலாங்கரை - 70 மி.மீ. மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். இருப்பினும் இதனால், தமிழகத்தில் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications