தென்காசியில் வெளுத்தெடுத்த மழை! சாலையில் ஒரு "குற்றாலம்" ..வெதர்மேன் வெளியிட்ட வீடியோ
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை, மணி முத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து இருக்கிறது. பாபநாசத்தின் கொள்ளளவு 143 அடியாக உள்ளது.
அது போல் தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

இரவு நேரங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேல் கடையநல்லூர், சுரண்டை, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சிவகிரியில் நேற்று முன் தினம் 120 மி.மீ. மழை பெய்துள்ளது. கடனாநதி அணை, ராம நதி அணை, கருப்பா நதி அணை ஆகியவற்றில் நீர் மட்டம் தலா ஓரடி உயர்ந்துவிட்டது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில் தென்காசியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஒரு சாலையில் தேங்கிய நீரில் இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பார்ப்பதற்கு வாட்டர் போட் போல் இருக்கின்றன. ஏதோ கடல் கரையில் வாகனங்களை இயக்குவது போல் தண்ணீர் அலை அலைகளாக ஓடுகிறது. இந்த நீரில் தத்தளித்தபடியே ஆம்புலன்ஸ் வாகனமும் வந்தது.
இரு சக்கர வாகனத்தின் இரு சக்கரங்களிலும் பாதி அளவு மூழ்கியுள்ளது. அது போல் கார்கள் எல்லாம் மிதந்தபடியே வருகின்றன. இந்த சாலையில் பள்ளம் மேடு தெரியாமல் புதிதாக வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர். சிலரது வாகனங்கள் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த வீடியோ தென்காசி வெதர் எனும் எக்ஸ் பக்கத்தில் இருந்து எடுத்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செங்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அது போல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications