அதிர்ச்சி.. பெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும்.. ஆயன்குளம் அதிசய கிணறு அடைத்துக்கொண்ட கொடூரம்.. ஷாக்
சென்னை: மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணறு அடைத்துக்கொண்டு, நீர் வேகமாக நிரம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

மீட்பு பணிகள்: மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அங்கே மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலியில் மழை நின்ற நிலையில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது. தண்ணீர் வடியும் நிலையில்.. மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நெல்லை திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசய கிணறு மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கும் ஆயன்குளம் "அதிசய கிணறு" என்ற பெயரை இது பெற்றுள்ளது.
அதிசய கிணறு: நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், நீரை உள்வாங்கி வரும் அதிசய கிணறு நிரம்பாமல் தண்ணீர் உள்ளே சென்று கொண்ட இருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு வெள்ளத்தின் போது ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாமல் பேசுபொருளான நிலையில், தற்போதைய வெள்ளத்தின் போதும் பல ஆயிரம் கன அடி வெள்ள நீரை உள்வாங்கிக் கொண்டு, அதிசய கிணறு நிரம்பாமல் இருந்தது. இதனால் இந்த கிணறு மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளானது. ஆனால் இன்று அதிகாலை இந்த கிணறு நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிரம்பியது: அங்கே சென்ற மக்கள்.. திடீரென கிணறு நிரம்பி இருந்ததை கண்டுபிடித்தனர். நீர் முழுமையாக நிரம்பி.. அதற்கு மேல் நீர் செல்லாது என்ற நிலையை அடைந்து உள்ளது. இப்படி மொத்தமாக கிணறு நிரம்பியது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எந்த வெள்ளத்திலும் நிரம்பாத கிணறு ஒன்று.. இந்த வெள்ளத்தில் திடீரென இன்று அதிகாலை நிரம்பியது மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எப்படி அடைத்துக்கொண்டது: ட்ரெண்டிங்ல் இருந்த ஆயன்குளம் அதிசய கிணறின் இன்றைய நிலைமை தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை தண்ணீரால் கிணறு மூழ்க வாய்ப்பு கிடையாது. ஆனால் சுற்றிலும் இருந்த ஜல்லி கற்கள் போன்றவை அதிகாரிகளின் மெத்தனத்தால் உள்ளே விழுந்து தண்ணீரை அடைத்துக் கொண்டது. கடந்த வருடமே இங்கே வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிணற்றை சுத்தம் செய்து தூர்வார முடிவு செய்தனர். ஆனால் அதை செய்யவில்லை. அப்படியே பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். அதோடு இல்லாமல் இந்த வருடம் அங்கே அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் போடப்பட்டது.
எக்கச்சக்கமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளே அடைத்துக்கொண்டது. பிளாஸ்டிக் குப்பைகள் வேகமாக வந்து.. அடைத்துக்கொண்டது. இதனால் இந்த முறை தண்ணீர் பெரிதாக வெளியேறவில்லை. அதிகாரிகள் அலட்சியம், சரியாக தூர்வாராமல் போனதே.. இந்த முறை தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications