சென்னை பெசன்ட் நகர் பீச்சில்.. கரை ஒதுங்கிய கொடூர விஷ ப்ளூ டிராகன்.. வெள்ளத்திற்கு இடையே நடந்த ஷாக்
சென்னை: சென்னையில் வெள்ளம் மற்றும் எண்ணெய் கசிவுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆழ்கடல் நச்சு உயிரினங்கள் கரை ஒதுங்கியதாக ஐரோப்பிய ஊடகமான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. .
ஆழ்கடலில் வசிக்கும் அதீத விஷமுள்ள இரண்டு வகை கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. ப்ளூ பட்டன் என்று அழைக்கப்படும் பட்டன் போன்ற தோற்றம் கொண்ட காலனியாக வாழும் கடல் உயிரினம் ஒன்றும் மற்றும் ப்ளூ சீ டிராகன் அழைக்கப்படும் ஒரு நச்சு மீனும் பெசன்ட் நகரில் காணப்பட்டன. புயல், வெள்ளத்திற்கு இடையே இவை கரை ஒதுங்கி உள்ளன.

வெள்ளம் டிராகன்: இந்த இரண்டு ஆழ்கடல் உயிரினங்களும் அதிக எண்ணிக்கையில் கரை ஒதுங்கியது. இந்த இரண்டு உயிரினங்களில் பல இறந்து ஒதுங்கியது. மற்றும் சில உயிருடன் ஒதுங்கியது என்று சென்னையில் வசிக்கும் மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் ஸ்ரீவத்சன் ராம்குமார் தெரிவித்துள்ளார். ப்ரோக்கன் ப்ரிட்ஜ் மற்றும் அஷ்டலக்ஷ்மி கோவில்களுக்கு இடையே இவை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடலில் கலக்கப்பட்ட எண்ணெய், வெள்ளம், புயல் காரணமாக ஏற்பட்ட கடினமான அலைகள் ஆகியவை இந்த டிராகன் வகை மீன்கள் கரை ஒதுங்க காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இவை இறந்தே கரை ஒதுங்கி இருக்கின்றன.

சென்னை வெள்ளம்; வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications