மாலை 4 மணி வரை.. அடித்து பெய்யப் போகும் மழை.. சென்னை, திருவள்ளூர் உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை மழை அடித்து பெய்யப் போக இருப்பதாக சென்னை வானிலை மையம் (TN Weather Alert) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, நெல்லை என தமிழகம் முழுக்க 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலையில் சென்னையிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான கிளைமேட் நிலவி வருகிறது.

இன்று மாலை 4 மணி வரை
குறிப்பாக நேற்று ஒரே நாளில் காரைக்காலில் 11 செமீ மழை பதிவாகியது. மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் 10 செமீ மழை பெய்தது. இதேபோன்று பெரம்பலூர், ஊத்துக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
16 மாவட்டங்கள் என்னென்ன
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, கோவை ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று இன்று மாலை 4 மணி வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று, நாளை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications