சென்னை ஈசிஆர் முதல் புதுச்சேரி வரை! டெல்டா டூ தென்தமிழகம் வரை! நாளை எங்கெல்லாம் மழை? வெதர்மேன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் மாநிலத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். குறிப்பாகச் சென்னை உட்படப் புறநகர்ப் பகுதிகளுக்கு மழை இருக்குமா என்பது குறித்து விளக்கியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பருவமழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இயல்பைக் காட்டிலும் அதிக மழை பருவமழை சீசனில் பெய்து இருப்பதால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

tamil nadu weatherman rain

பொதுமக்கள் இப்போது புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.

வெதர்மேன் பிரதீப் ஜான்:

இதற்கிடையே தற்போதுள்ள வானிலை சூழலில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது தொடர்பான தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை எந்தளவுக்குப் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த விவரங்களையும் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈசிஆர் முதல் பாண்டிச்சேரி முதல் டெல்டா வரை மழை பெய்யும். அதன் பின்னர் மழை டெல்டா முதல் ராமநாதபுரம், தூத்துக்குடி முதல் நெல்லை வரை பெய்யத் தொடங்கும்.

மழை எங்கே இருக்கும்:

கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) பகுதிகளைப் பொறுத்தவரைக் காற்றழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே தள்ளப்படும். இதனால் கடலூர் முதல் டெல்டா பெல்ட் வரை தென் தமிழ்நாட்டிற்கு நாளை மழை இருக்கும். டெல்டா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மட்டுமே மழை பெய்யும். குறிப்பாக நெல்லை, மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜன. 31ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.1 முதல் ஜன. 4 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tamil nadu weatherman rain

சென்னை கிளைமேட்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது /மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக கடோலர பகுதிகளில் நாளைய தினம் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+