நெல்லை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. விரைந்தது பேரிடர் மீட்பு குழு!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகரும் எனவும் இதனால் தமிழகத்தில் அடுத்த ரவுண்டு மீண்டும் மழை வேகமெடுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விரைந்த பேரிடர் மீட்பு படையினர்
குறிப்பாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுக்க பரவலாக கனமழைக்கும், டெல்டா, தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் நெல்லை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மாவட்டங்களில் அனைத்து துறைகள் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
அதாவது இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கும், நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அவசர காலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வழிகாட்டுதல்கள்
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடனடி தகவல்கள், உணவு தேவை, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத் துறை, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாளை ஒரு சில இடங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications