Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரஞ்ச் வார்னிங்.. நீலகிரி, கோவையில் கொட்டுது மழை.. திண்டுக்கல், திருப்பூர், தேனிக்கும் கனமழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால், இந்த 2 மாவட்டங்களுக்கும், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனாலும், நிறைய இடங்களில் வெயிலும் சேர்ந்தே கொளுத்தி எடுக்கிறது.. முக்கியமாக நாகை மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது..

Rain Weather Report Orange Alert

பாரன்ஹீட்: அந்தவகையில், நாகப்பட்டினம் - 102.2 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் - 101.5 டிகிரி பாரன்ஹீட் , பரங்கிப்பேட்டை - 101.3 டிகிரி பாரன்ஹீட், கடலூர் - 101.1 டிகிரி பாரன்ஹீட், தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட், வேலூர் - 100 டிகிரி பாரன்ஹீட் என நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் வெயில் சதமடித்திருந்தது.

மற்றொருபக்கம், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினம்கூட, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.. அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

நீலகிரி, கோவை: அதன்படியே மேற்கண்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.. இந்நிலையில், நீலகிரி, கோவையில் இன்று அதாவது ஜூலை 31 மிக கனமழையும், திருப்பூர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில், கனமழையும் பெய்யும் என்று மீண்டும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக 2 மாவட்டங்களுக்கும், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்.

கனமழை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, வால்பாறையில், 31 செ.மீ., மழையும், சின்னக்கல்லார், 24; சின்கோனா, விண்ட் வொர்த் எஸ்டேட், 23; பந்தலுார், தேவாலா, 20; சோலையார், 19 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

செங்கோட்டை: அவலாஞ்சி, மேல்கூடலுார், 17; மேல்பவானி, 10; சிறுவாணி, 9; பொள்ளாச்சி, பெரியாறு, 8; ஆழியார், 6; மாஞ்சோலை, 5; செங்கோட்டை, பேச்சிப்பாறை, 4; குழித்துறை, போடி, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குற்றால அருவியில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டிந்தது. கடந்த 3 நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வரும்நிலையில், குற்றாலம் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள்: நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 3-வது நாளாக நேற்று தடை விதிக்கப்பட்டது.. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் நேற்றுகூட சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.. அத்துடன், குற்றாலத்தில் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.. இந்நிலையில், 3 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+