கூடங்குளம் இளைஞர்களின் வீரம் + விவேகம்.. காப்பாற்றப்பட்ட 3 மாத கைக் குழந்தை உட்பட 5 பேர்- வீடியோ இதோ
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இருந்து விருதுநகர் சென்ற கார் பிள்ளையார் கோவில் முன்பு வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் இழுத்து வரப்பட்டது. ஆனால் கூடங்குளம் இளைஞர்களால் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார், தடுத்து நிறுத்தபட்டு அதில் பயணம் செய்த 3 மாத கைகுழந்தை உட்பட 5 உயிர்களை காப்பாற்றினார்கள்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. மேகங்கள் மொத்தமாக குவிந்து விடமால் கொட்டியதால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம் போன்ற கடற்கரையோ பகுதிகளில் 40 முதல் 90 செமீ மழை பெய்துள்ளது.

காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குற்றாலம், பாபநாசம், கூடங்குளம் என திருநெல்வேலி சீமையே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரயில்கள் நடுவழியில் தத்தளிக்கின்றது. திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரயில் சிக்கி கொண்டுள்ளது.
பொதுவாக பெருமழை பெய்தாலே செல்போன், இணையசேவை கடுமையாக பாதிக்கப்படும். அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அபாயத்தை உணராமல் சாலைகளில் பயணித்த பலர், வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டன. வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது.
.கூடன்குளம் வழியாக இருந்து விருதுநகர் சென்ற கார் பிள்ளையார் கோவில் முன்பு வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் இழுத்து வரப்பட்டது கூடல் இளைஞர்களால் வெள்ளத்தில் தடுத்து நிறுத்தபட்டு அதில் பயணம் செய்த 3 மாத கைகுழந்தை உட்பட 5 உயிர்கள் காக்க பட்டன, pic.twitter.com/MpJfahb1Lv
— 🆅🅸🅹🅰🆈 🅺🆁🅸🆂🅷 (@vijaykrish4u) December 17, 2023
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் சாலைகளில் காட்டாறு போல் பாய்ந்தோடிய வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. கூடங்குளம் வழியாக இருந்து விருதுநகர் சென்ற கார் பிள்ளையார் கோவில் முன்பு வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் இழுத்து வரப்பட்டது. இதை கண்டு காரில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பினார்கள். இதையடுத்து உடடியாக காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல், கூடங்குளம் இளைஞர்கள் உடனடியாக ஒன்று சேர்ந்து, இழுத்து செல்லப்பட்ட காரை தடுத்து நிறுத்தினர். அதில் பயணம் செய்த 3 மாத கைகுழந்தை உட்பட 5 உயிர்களை காப்பாற்றி உள்ளார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஐந்து உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. கூடங்குளம் இளைஞர்களின் இந்த மனித நேயமிக்க செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதுபோன்ற புயல் மழை காலங்களில் மனித நேயமும், மக்கள் தாங்களாக முன்வந்து உதவும் போது மட்டுமே தப்பிக்க முடியும் என்ற நிலை உள்ளது. சென்னையில் 2015 வெள்ளத்தை கடக்க மனிதம் தான் காரணம் ஆகும். இதேபோல் 2023 சென்னை வெள்ளமும் மனிதம் மட்டுமே நம்மை காக்கும் என்பதை உணர்த்தியது. இந்நிலையில் திருநெல்வேலி வெள்ளத்திலுமே சக மனிதனுக்கு உதவும் எண்ணமே நம்மை காக்க உதவும். அந்த வகையில் கூடங்குளம் இளைஞர்கள் போல் எல்லா ஊர் இளைஞர்களும் இணைந்து நிவாரணங்களில் இறங்கும் போது, நிச்சயம் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீள முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications