வெளுத்துக்கட்டிய கனமழை.. 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக மழைப்பொழிவு இங்குதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானூரில் 184 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அநேக இடங்களில் மழை பெய்தது.

chennai rain weather

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை, 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8:30 மணியளவில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது. இன்று மதியம், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

பின்னர் இது, வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த நிலை, புயலாக மாறுமா என்பதை இன்று தான் கணிக்க முடியும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ரெட் அலெர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகனமழை, அதாவது, 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று மிக கனமழை அதாவது, 11 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

மஞ்சள் அலெர்ட்

சேலம், திருச்சி, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில், நாளை மிக கனமழையும், வேலுார், திருப்பத் துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

வானூர்- 184 மி.மீ
வல்லம்- 170
விழுப்புரம்-168
ஊத்துக்கோட்டை-167
தியாகதுருகம்- 125
செஞ்சி-123
வாலாஜாபாத்-117
ஆவடி- 117
கெடார்-115
திருவாலங்காடு -112
நெற்குன்றம்-110
மதுரவாயல்- 106
வளவனூர்-106
மண்டபம் - 103
சூரப்பட்டு- 103
திண்டிவனம்- 103
கோலியனூர்- 100
கலவை-99
மதுராந்தகம்-98
சாலிகிராமம்-96
அரவக்குறிச்சி-96
முண்டியம்பாக்கம்-95
மரக்காணம்- 94
திருப்புவனம்- 93
வளசரவாக்கம்- 91
காரைக்குடி-90
கும்மிடிபூண்டி- 89
ஸ்ரீபெரும்புதூர்-88
ஆற்காடு- 88
நீடாமங்கலம்- 88
திருப்பத்தூர்- 88
உடுமலை-85
மணலூர்பேட்டை- 85
சங்கராபுரம்- 85

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+