சென்னை புறநகரில் வசிப்போருக்கு அலர்ட்! நள்ளிரவு வரை கொட்டும் கனமழை.. 36 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் இப்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் கிட்டதட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை புறநகர்ப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் காலம் முடிந்து பருவமழை தொடங்கியது முதலே கணிசமாக நல்ல மழை பெய்து வருகிறது. இடையில் சில காலம் மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் மக்கள்: அதாவது இரவு 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய சென்னை புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை இருக்கு: மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும் சில இடங்களில் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை தேவை: அதேபோல சென்னை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, இரவு வெளியே செல்ல பிளான் வைத்து இருப்போர் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications