ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சே! சென்னையில் காலை முதல் விடாமல் நடந்த சம்பவம்! பெங்கல் புயல் உருவாகும் நேரம்
சென்னை: சென்னையில் அதிகாலை முதல் மிக அதிகமான பலத்த காற்று வீசி வருகிறது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கி உள்ளது.
இன்று மாலை - நாளை அதிகாலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு வானிலை மைய அறிவிப்புப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை காற்று: சென்னையில் அதிகாலை முதல் மிக அதிகமான பலத்த காற்று வீசி வருகிறது. புயல் காரணமாக பலத்த காற்று வீசி வருவதால், சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் சாலை, ராயபுரம் மேம்பாலம் அருகே சாலையில் இருபுறமும் பொதுமக்கள் தங்களுடைய சொகுசு கார்களை நிறுத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த காற்று வீசும். சென்னையில் ஊட்டி போன்ற வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக காலையில் பனிப்பொழிவு அதிகம் உள்ளது.
இந்த புயல் சின்னம் கரையை கடக்கும் போது கண்டிப்பாக தீவிர புயலாக அல்லது வலிமை நிறைந்த புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளது இதன் காரணமாக புயல் உருவாவதற்கான.. அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன.












Click it and Unblock the Notifications