போ.. போ.. மழையெல்லாம் முடிஞ்சது! சென்னையில் வெப்ப அலை.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்
சென்னை: வங்க கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெப்ப அலை உருவாகும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெளியில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
"தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து இன்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து புயலாக நாளை (மே 25) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.
இது, வடக்கு திசையில் நகா்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ம் தேதி வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த 'ரீமெல்' என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரள கடற்கரையையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 25-29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் புயல் காரணமாக மழைப்பொழிவு குறைந்து வெப்ப அலை உருவாகும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "புயல் காரணமாக மழை பொழிவு குறையும். எனவே இந்த மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் என சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வெயில் 40 டிகிரி செல்சியஸை கடக்கவில்லை. ஆனால் இந்த மாதம் இறுதியில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தமிழகக்தின் மழை பொழிவை புயல் குறைக்கும். கன்னியாகுமரி, தென் மாவட்டங்களான மதுரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நெல்லை பகுதிகள், வால்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை போல இருக்கும்.
ஒட்டுமொத்த வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் வெயில் 50 டிகிரி செல்சியஸை கடக்க இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சென்னையில் தற்போதுதான் வெயில் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இப்படி இருக்கையில் வெதர்மேனின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications