இன்னும் வேகம் எடுக்கலை! போக்கு காட்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்து நடக்க போகும் 10 விஷயங்கள்
சென்னை: சற்று நேரத்திற்கு முன் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வானிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நடக்க போகும் 10 விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நினைத்தை விட மெதுவாக வலிமை பெற்று வருகிறது. நேற்று இரவே மிக அதிக வலிமை அடைந்திருக்க வேண்டியது தற்போது மெதுவாக வலிமை அடைந்து வருகிறது.
2. இன்று அதிகாலைதான் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது இனி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம்.
3. இதனால் இன்று பெய்ய வேண்டிய மிக கனமழை நாளை பெய்யும். அதாவது இன்றும் மழை பெய்யும். ஆனால் ரெட் அலர்ட் அளவிற்கு பெய்யுமா என்பது சந்தேகம்தான்.
4. அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை அடையும்.
5. இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைந்த பின் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. இதுவரை மழை மிக தீவிரம் அடையவில்லை என்றாலும் போக போக தீவிரம் அடையும். வானிலை வல்லுனர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் தாழ்வு மண்டலம் வலிமை அடைவதே மழை வேகம் எடுக்காமல் போனதற்கு காரணம்.
7. இன்று சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
8. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்டும்.. நாளை ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
9. இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
10. நாளை 16.10.2024: வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications