அடித்து நொறுக்கும் கனமழை.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்' என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இதனால் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலை 8.30 மணி வரை தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை மைய விரிவான அறிவிப்பு: இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1.தென்கிழக்க வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வக காற்றழுத்த தாழ்வு பாதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பாதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15ஆம் தேதி போக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் தகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை வட்டிய மத்தியமேற்க வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் திகம்பி வரிசா கடலோர பகுதிகளை ஓட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.
2.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக
15.11.2023; கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் வககிய இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய யேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பதிைகளில் ஓரிக இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.1.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சில இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.11.2023 மற்றும் 1811.2003 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2023 மற்றும் 20.1.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாதிகளில் வருநில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications