டெல்லிக்கு போனதும்.. வீடியோ காலில் கடுகடுத்த ஸ்டாலின்.. ரொம்ப முக்கியமான உத்தரவு.. அரண்ட தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள நஷ்டங்கள் மற்றும் பேரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து அவர் நிவாரணம் கோர உள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருக்கிறது.

What did CM Stalin say to officials after going to Delhi in the video call?

தென் தமிழ்நாடு முழுக்க பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இன்னும் அங்கே மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீட்பு பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

வெள்ளம் இன்னும் வடியாத காரணத்தால் குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முதல்வர் டெல்லி பயணம்: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள நஷ்டங்கள் மற்றும் பேரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து அவர் நிவாரணம் கோர உள்ளார்.

இந்த பயணத்திற்கு பின்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கால் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசினார். டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்

ஆட்சியர்களுக்கு உத்தரவு: இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுகடுப்புடன் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார். வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, குறுகிய காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம்.

தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும். பக்கத்து மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை பெற்று தேவைப்படும் இடங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்.

What did CM Stalin say to officials after going to Delhi in the video call?

நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டிய சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது.

மக்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் ராணுவம், NDRF. SDRF ஆகியவற்றோடு இணைந்து, காவல்துறையும், தீயணைப்பு துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+