சென்னை வெள்ளத்துக்கு காரணம் இதுதான்! அதிகரித்த வடகிழக்கு பருவமழை! இவ்வளவு சதவீதமா? ஷாக் டேட்டா
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னை தண்ணீரில் மூழ்கியதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இதையடுத்து மழை இல்லாத நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
சென்னையை பொறுத்தமட்டில் ஏறக்குறைய அனைத்து இடங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. மழை நின்ற நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தற்போது பல இடங்களில் தண்ணீர் என்பது வடிந்துள்ளது. இருப்பினும் இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். அரசு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மூலம் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தமிழக அரசு மீட்பு, நிவாரண பணியை சரியாக செய்யவில்லை. அதோடு சென்னையை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி திட்ட பணிகளை சரியாக தமிழக அரசு சரியாக செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன. இதுபற்றி திமுகவினரிடம் கேட்டால், ‛‛நாங்கள் புதிய திட்டங்களை செய்ததால் தான் பாதிப்பு என்பது குறைந்துள்ளது. இல்லாவிட்டால் இன்னும் அதிகளவு தண்ணீர் தேங்கியிருக்கும்'' என்றனர். முதல்வர் ஸ்டாலினோ, ‛‛இந்த விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை'' என தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க சென்னை மழை வெள்ளத்துக்கு முக்கிய காரணம் என்பது அங்கு பெய்த அதிகமான மழை தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று வரை பெய்த வடகிழக்கு பருவமழை தொடர்பான விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் வடகிழக்கு பருவமழை என்பது இயல்பை விட 50 சதவீதம் வரை அதிகமாக பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் அக்டோபர் 1 ம் தேதி வரை இதுவரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் வடகிழக்கு பருவமழை என்பது 718 மில்லி மீட்டர்(71.8 செமீ) என்ற அளவில் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் இந்த காலக்கட்டத்தில் 1028.22 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவை விட 50 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்த மழை அளவு என்பது சென்னையின் வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
சென்னையில் இப்படி வடகிழக்கு பருவமழை இப்படி அதிகமாக பெய்திருந்தாலும் கூட ஒட்டுமொத்த தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மழை அளவு என்பது குறைந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழக வடகிழக்கு பருவமழை என்பது 387.7 மில்லி மீட்டர் என்ற அளவில் பெய்திருக்க வேண்டும். ஆனால் இது 375.3 மீட்டர் என்ற அளவில் மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பு மழை அளவை விட 3 சதவீதம் குறைவாகும். இருப்பினும் கூட அடுத்த சில நாட்கள் தீவிரமாக மழை பெய்தால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது இயல்பு அளவை எட்டலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications