சிவப்பு நிறத்தில்.. நெல்லை, குமரிக்கு மேலே அது என்ன? வானத்தில் நடக்கும் சம்பவம்.. ஜாக்கிரதை!
சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இப்போதைக்கு நிற்காது, கண்டிப்பாக தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
தென் தமிழ்நாட்டில் கடந்த 10 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
மேலடுக்கு சுழற்சி: குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேபோல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
முக்கியமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும்..செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்று வானிலை மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ரெக்கார்ட்: பல இடங்களில் ரெக்கார்ட் படைக்கும் அளவிற்கும் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 மணி முதல் தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் மட்டும் 207 மி.மீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மைய ரெக்கார்ட் கூறுகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் 67 மிமீ மழை பெய்துள்ளது, தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்தது.
மழை மேக புகைப்படம்: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இப்போதைக்கு நிற்காது, கண்டிப்பாக தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மேலே இருக்கும் மழை மேகங்கள் இதில் பதிவாகி உள்ளன. சிவப்பு நிறத்தில் ரத்தம் போல நீண்டு பரவி இருக்கும் மழை மேகங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த மேகங்கள் தொடர்ந்து அங்கேயே சுழலும். இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய் கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications