மீண்ட சென்னை.. ஆனால் கடல் மட்டத்திலிருந்து.. 900மீ மேல் உள்ள பெங்களூரில் வெள்ளம் வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சென்னை கனமழைக்கு இடையே வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கட்டிடங்களுக்குள் சிக்கி தவிக்கின்றனர். இந்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட 100 ஏரிகள் நிரம்பியுள்ளன, மேலும் 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

நகரின் வடக்குப் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) GKVK நிலையத்தில் 186.2 மிமீ பதிவானது. இது 27 ஆண்டுகளில் நகரில் IMD நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி மழையாகும். இதற்கு முன் அக்டோபர் 1, 1997 அன்று 178.9 மிமீ என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

weather tamilnadu weatherman summer weather news

மூழ்கிய பூங்கா: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி அலுவலக இடங்களில் ஒன்றான மன்யாதா டெக் பூங்காவும் இடைவிடாது பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பல தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கொடுத்துள்ளன. இரவு பணிகளை செய்தவர்கள்.. தங்கள் அலுவலகங்களிலேயே தங்குமாறும் கூறப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப பூங்காவிற்குள்ளும் வெளியேயும் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும்படி நிறுவனங்கள் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய தொழில்நுட்ப பூங்காவின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

என்ன காரணம்?: கடல் மட்டத்தில் இருந்து வெறும் 7 மீ உயரத்தில் உள்ள சென்னை மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே இந்த வருடம் மீண்டது. பெங்களூரை விட 3 மடங்கு மழையை எதிர்கொண்டும் சென்னை தப்பித்து உள்ளது. ஆனால் அதைவிட குறைவான மழை பெய்தும் கூட.. 900 மீ மேல் உள்ள பெங்களூர் கனமழையால் மிதந்து உள்ளது. பெங்களூரில் இப்படி வெள்ளம் ஏற்பட முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

1. பெங்களூரில் ஏரிகள் இருந்த பகுதிகளில் ஏரிகள் நிரம்பி சில இடங்களில் தண்ணீர் வெளியேறி உள்ளது.

2. ஏரிகள் இருந்த பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டது முக்கிய காரணம்.

3. அதேபோல் ஏரிகளுக்கு இடையே உள்ள நிலப்பகுதியில்.. வலிமை இல்லாத இடங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டியது.

4 . மன்யாதா டெக் பூங்காவைத் தவிர, கெத்தலஹள்ளி ரயில்வே அண்டர்பிரிட்ஜ் மற்றும் ஆர்ஜிஏ டெக் பார்க் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டு அந்த காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.இவை எல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட பெங்களூர் பகுதிகள். இவை எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளன.

5. பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கட்டிடங்களுக்குள் சிக்கி தவிக்கின்றனர். இவை எல்லாம் பெரும்பாலும் திட்டமின்றி கட்டப்பட்ட பகுதிகள் . பெங்களூரின் பெரும்பாலான பழைய பகுதிகள் பெரிதாக பாதிக்கவில்லை.

6. இந்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட 100 ஏரிகள் நிரம்பியுள்ளன, மேலும் 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல முறையின்றி அனுமதி பெறப்பட்ட.. ஏரி ஓரம் கட்டப்பட்ட வீடுகள் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+