தமிழ்நாட்டில் எங்கு அதிக மழை.. சென்னையில் எங்கு அதிக மழை.. வெதர்மேன் வெளியிட்ட புள்ளி விவரம்
சென்னை: சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை டெல்டா முதல் கடலூர் வரை பெரிய அளவில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை ஊட்டி போன்று இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறினார். அதேநேரம் தமிழகத்தில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்தும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 470 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயலாக) மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டிருகிறது
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து கூறுகையில், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை வரையிலான கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை டெல்டா முதல் கடலூர் வரை பெரிய அளவில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை ஊட்டி போன்று இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் வெதர்மேன் மழை குறித்து வெளியிட்டுள்ள ட்வீட் டேட்டாக்களின் பதிவின்படி, நவம்பர் 27ம்தேதியான இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரையில் 180 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்ததாக நாகப்பட்டினத்தில் 179.9 மில்லி மீட்டர் மழையும், வேளாங்கண்ணியில் 177 மி.மீட்டர் மழையம் , திருப்பூண்டியில் 141.5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை மணலியில் 133.9 மில்லி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் அருகே திருக்குவளையில் 125.6 மீட்டர் மழையும், திருவாரூரில் 122 மீட்டர் மழையும், வேதாரண்யத்தில் 121 மிமீ மழையும் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பெய்துள்ளது. செய்யாறில் 114, தலைஞாயிறுவில் 113, சீர்காழியில் 112, சென்னை கத்திவாக்கத்தில் 112, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 111, கடலூர் மாவட்டம் வடகுத்தில் 108, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 106, மயிலாடுதுறை தரங்கம்பாடியில் 104, மயிலாடுதுறையில் 104, கடலுரில் 97, நன்னிலத்தில் 96, முத்துப்பேட்டை 95, மன்னார்குடியில் 93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications