அது ஏன் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்கிறது? வீட்டை விட்டு வெளியே போறவங்க நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று இரவில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்கிறது. ஒரே அடியாக விடாமல் மழை பெய்யாமல்.. அதே சமயம் ஒரே அடியாக மழை நிற்காமல் விட்டு விட்டு மழை பெய்கிறது.

இப்படி மழை பெய்வதற்கு பின் காரணம் உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் உள்ளது. வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாழ்வு மையத்திற்கு முன்னும், பின்பும் நிறைய மழை மேகங்கள் இருக்கும்.

tamilnadu weatherman summer weather news

தாழ்வு மையத்தின் நகர்வு காரணமாக.. இந்த மழை மேகங்களும் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும். ஆனால் தாழ்வு மையம் கரையை கடக்கும் போது கொடுக்கும் மழை அளவிற்கு கனமழையை கொடுக்காது. மாறாக தற்போது நகரும் மழை மேகங்கள்.. விட்டு விட்டு மழையை கொடுக்கும்.

இந்த மழை மேகங்கள் உதிரி உதிரியாக இருக்கும். இதனால் ஒரே அடியாக மழையை கொடுக்காமல் அடிக்கடி பிரேக் எடுத்து கொடுக்கும். கடந்த 2 மணி நேரமாக மழை பெய்த நிலையில்.. தற்போது அடுத்த 1 மணி நேரம் பிரேக் எடுக்கும். அதன்பின் மீண்டும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகர்ந்து வருகிறது.

மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கி உள்ளது. அதாவது வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி எங்கே செல்கிறது.. எங்கே இருக்கிறது என்ற புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 360 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+