மழையை விடுங்க.. அதை விட பெரிய சம்பவம் நடக்க போகுது.. வானிலை வல்லுனர்கள் தந்த வார்னிங்.. ரெடியா?
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதில் ஒன்று புயல் சின்னமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்வடன் கூயெ லோ, தேனி வற்றுத தின மமைல் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்படுகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.11.2023 மற்றும் 26.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
மழையை விடுங்க: தற்போது ஒரே நேரத்தில் இரண்டு சுழற்சிகள் நிலவுகிறது. 1. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதில் ஒன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாம்.
நம்மிடம் பேசிய வானிலை வல்லுனர்கள்.. தற்போது இரண்டு சுழற்சிகள் உள்ளன. இதில் ஒரு சுழற்சி பூமிக்கு அருகில் உள்ளது. இது தாழ்வு பகுதியாக மாறாது. தெற்கு மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது இந்த மாத இறுதியில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக வடகிழக்கு பருவமழையை ஒரு புயல் சின்னமாவது உருவாக வாய்ப்புகள் உள்ளன. இந்த முறை அப்படி இதுவரை உருவாகவில்லை. இந்த மாத இறுதியில் புயல் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதாக வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications