School leave on Dec 1: டிசம்பர் 1-ஆம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா? வெதர்மேன் சொன்ன தகவல்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழையானது இன்றும் நாளையும் தொடங்கும். பள்ளி மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து இந்த மழை டிசம்பர் 1 ஆம் தேதியும் தொடர்ந்தால் மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

குறைந்தபட்சம் 150 மி.மீ.ருக்கு மேல் மழை பதிவானாலும் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது. எனவே டிசம்பர் 1 வரை மழை தொடர்ந்தால் பள்ளி மாணவர்களின் ஆசை நிறைவேறும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அது போல் அவர் பல்வேறு கேள்விகளுக்கும் விடையளித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும். இந்த புயல் சென்னைக்கு வரும் போது வலுவிழப்பதால் காற்றானது மணிக்கு 50 அல்லது 60 கி.மீ. வேகத்தில் இருக்கும். கஜா புயலின்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்திலும் தானே புயலின் போது 150 கி.மீ. வேகத்திலும் வர்தா புயலின் போது 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது.
டிட்வா புயல் யாழ்ப்பாணம் கடற்கரைக்கு வந்ததும் அங்கு மேலும் வலுப்பெற முயற்சிக்கும். அப்போது இன்றைய தினம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். அது போல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளிலும் கனமழை பெய்யும்.
டிட்வா புயல் சற்று மேல் நோக்கி நகர்ந்ததும் கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காரைக்காலில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு- தென்கிழக்கை 330 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது இலங்கை நிலப்பரப்பில் இருந்து முழுமையாக விலகி, டெல்டா, வட இலங்கை கடல் பகுதிகளை இன்று காலை வந்தடைந்தது. பொதுவாக காற்றின் வேகம் 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வரை இருந்தால் மட்டுமே அது புயல். தற்போது வரை 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும்போது புயல் காற்று சுழற்சியின் மைய வேகம் 70 முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications