படகுக்கு ரூ.2000.. 2 நாளா சாப்பிடல.. நெஞ்சளவு மழைநீரில் மீண்டு வந்த வேளச்சேரி இளைஞர்கள் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்த நிலையில், வேளச்சேரி உள்ளிட்ட மிகவும் தாழ்வான பகுதிகளில் உட்புற சாலைகளில் இன்னும் மழைநீர் வடிந்தபாடில்லை. போராடி வெளியே வந்த இளைஞர்கள், இன்னும் ஏராளமானோர் மீட்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர்.

Youths recovered after paying thousands for rescue boats in velacherry chennai

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையின் காரணமாக பள்ளமான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை வேளச்சேரி டான்சி நகர், விஜயா நகர், ராம் நகர், ஏ ஜி எஸ் காலனி, என் ஜி ஓ காலனி, வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு மேல் மழைநீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் வேளச்சேரி ஏரி அதன் கொள்ளவை விட அதிகம் நிரம்பியதால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே தேங்கியுள்ள மழை நீருடன் சேர்ந்து நீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், 2 நாட்களுக்குப் பிறகு படகு மூலமாக, தங்கள் வீட்டில் இருந்து வேளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "இந்தப் பகுதிகளில் ஏராளமான கார்கள், பைக்குகள் மழைநீரில் மூழ்கிவிட்டன. எங்கள் வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் மழைநீர் வடியவில்லை. இப்போதும் நெஞ்சு அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

பால் உட்பட எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவில்லை. 2 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் போனிலும் சார்ஜ் இல்லை. யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கொசு அதிகமாக உள்ளது. கழிவுநீரும் சேர்ந்து தேங்கி இருப்பதால், நோய்கள் பரவுமோ என்ற அச்சம் உள்ளது. மெயின் ரோடுகளில் மட்டுமே மழைநீர் கொஞ்சம் வடிந்துள்ளது. உட்புற பகுதிகளில் இன்னும் மழைநீர் சுத்தமாக வடியவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.

சாரதி நகர் 2வது தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுகையில், "மழைநீர் அதிகமாக எங்கள் பகுதிக்கு வந்து வீடு முழுவதும் மழைநீர் நிறைந்துவிட்டது. எனது பைக், துணி மணிகள் எல்லாம் மழைநீரில் வீணானதோடு, எனது சர்ட்டிஃபிகேட்களும் வீணாகி விட்டன. கடந்த 2 நாட்களாகச் சாப்பிடவில்லை. எங்களால் வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியவில்லை. மொட்டை மாடியில் தான் இருந்தோம். அங்கிருந்து படகில் வருவதற்கு 2,000 ரூபாய் கேட்டார்கள். கையில் சுத்தமாக பணமே இல்லாததால் அதுவும் முடியவில்லை. இளைஞர்கள் மழைநீருக்குள்ளேயே நடந்து தப்பி வந்துவிட்டோம். இன்னும் ஏராளமானோர் மீட்கப்படவில்லை. எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

விஜிபி செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுகையில், "எங்கள் பகுதியில் 2 நாட்களாகவே நெஞ்சு அளவுக்கு மழைநீர் உள்ளது. யாராலும் வெளியே வர முடியவில்லை. அவசர உதவி எண்களுக்கும் அழைக்க முடியவில்லை. இன்னும் ஏராளமான மக்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். 2000 ரூபாய் கொடுத்தால் தான் படகை எடுப்போம் எனக் கூறினார்கள். அப்படி கொடுத்துதான் அங்கிருந்து நாங்கள் நண்பர்களுடன் மீண்டு வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+