For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆலய தரிசனம்: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்- செவ்வாய்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது அருள்மிகு திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் ஆகும். நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

புராண சிறப்பு:

முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur

தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்தி நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.

குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் தாமோதரன் நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.

வைத்தமாநிதி என்ற திருநமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:

பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

தனிச்சிறப்பு:

நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.

ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

Sri Vaithamanidhi Perumal, Temple, Tirukolur

அமைவிடம்:

திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூம்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம் : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம் : வைகாநச ஆகமம்
விமானம் ஸ்ரீகர விமானம்

சிறப்பு செய்தி:

குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது, மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி அன்று என்பதாகும். இந்த நாள் வரும் திங்கள் கிழமை 02-03-2015 ஆகும். செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் அன்றைய தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.

English summary
This is one(87th) of the 108 Divyadesa Vaishnava temple and third in the Nava Tirupathi order. Of the Nava Tirupathis, this belongs to planet Mars. Perumal is protecting the Nava Nidhi (9 wealths) under His right shoulder. The Vimana - tower above the sanctum sanctorum - is known as Srikara Vimana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X