For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவர் டூ மத்திய அமைச்சர்.... தற்போது முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனாக இருந்தபோதும் மருத்துவராக வாழ்க்கையை தொடங்கியவர் அன்புமணி. பின்னர் ராஜ்யசபா எம்.பி, மத்திய அமைச்சர் தற்போது முதல்வர் வேட்பாளர் என விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் 1968-ம் ஆண்டு பிறந்தவர். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்தார்.

Dr Anbumani's biography

2004-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாகி அரசியலில் நுழைந்தவர். 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அரசில் மிகவும் இளைய அமைச்சராக இருந்தவர் அன்புமணி.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி, 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி.னார். தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பென்னாகரம் சட்டசபை தேர்தலில் தற்போது போட்டியிடுகிறார்.

பசுமைத் தாயகம் என்ற என்.ஜி.ஓ. மூலம் சூழலியல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி பதவி வகித்த காலத்தில்தான் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் 108 ஆம்புலன்ஸ் சேவையும் அன்புமணி பதவி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மது, புகையிலைக்கு எதிரான தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை அமல்படுத்துதற்கான சட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதியளித்திருக்கிறார் அன்புமணி.

English summary
Here is the Bio data of PMK CM Candidate Anbumani Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X