88 தொகுதிகள்.. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 2ஆம் கட்ட லோக்சபா தேர்தல்! 60% வாக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 60 வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16ம் தேதி அறிவித்தது. இதையடுத்து முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.

Lok Sabha Election 2nd Phase for 88 constituencies in 13 states including Kerala and Karnataka to be held today

இதையடுத்து இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இன்றைய தினம் மொத்தம் 89 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி மாரடைப்பால் இறந்த நிலையில் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் பேதுல் தொகுதி தவிர மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கூட்டணி, ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, பாஜக கூட்டணி இடையே போட்டி உள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜாவும், கேரளா பாஜக தலைவர் சுரேந்திரனும் போட்டியிட்டுள்ளனர். திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமிறங்கி உள்ளார்.

அதேபோல் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் புறநகர் உள்பட வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களில் தலா 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 12 மாநிலம், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,098 பேர் ஆண்களாகவும், 102 பேர் பெண்களாகவும், 2 பேர் 3ம் பாலினத்தவர்களாகவும் உள்ளனர்.

இந்த 88 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கி உள்ளனர். இந்த ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 8.08 கோடி ஆண்களும், 7.8 கோடி பெண்களும், 5,929 மூன்றாம் பாலினத்தவர்கள் னெ்று மொத்தம் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இதில் 34.8 லட்சம் பேர் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர். மேலும் 3.28 கோடி வாக்காளர்கள் 20 முதல் 29 வயதிற்குள் உள்ளனர்.

இன்று நடைபெறும் தேர்தலை அமைதியாக நடத்த உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களுக்காக மொத்தம் 1.67 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 88 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இந்த 13 மாநிலங்களில் விறுவிறுப்பாக தேர்தல் நடந்து வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி அசாமில் 9.71%, பீகாரில்- 9.84%, சத்தீஸ்கரில் 15.42%, ஜம்மு காஷ்மீரில் 10.39%, கர்நாடகாவில் 9.21% ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மேலும் கேரளாவில் 11.98%, மத்திய பிரதேசத்தில் 13.82%, மகாராஷ்டிராவில் 7.45%, மணிப்பூரில் 15.49%, ராஜஸ்தான் 11.77%, திரிபுராவில் 16.65%, உத்த பிரதேசத்தில் 11.67 சதவீதம், மேற்கு வங்கத்தில் 15.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு மதியம் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு அசாம் - 46.31%, பீகார்- 33.80%, சத்தீஸ்கர்- 53.09%, ஜம்மு காஷ்மீர்- 42.88%, கர்நாடகா 38.23%, கேரளா 39.26%, ம.பி. 38.96%, மகாராஷ்டிரா 31.77%, மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, திரிபுரா 54.47%, உ.பி. 35.73%, மேற்கு வங்கம் 44.2% பதிவானது.

சிறு சிறு அசம்பாவிதங்களைத் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 60 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவில், மாநில வாரியாக வாக்குப்பதிவு:

அசாம் - 70.68%
பீகார் - 54.91%
சத்தீஸ்கர் - 73.19%
ஜம்மு காஷ்மீர் - 71.63%
கர்நாடகா - 67.45%
கேரளா - 65.34%
மத்திய பிரதேசம் - 56.76%
மகாராஷ்டிரா - 54.34%
மணிப்பூர் - 77.18%
ராஜஸ்தான் - 63.93%
திரிபுரா - 78.63%
உத்தர பிரதேசம் - 54.83%
மேற்கு வங்கம் - 71.84%.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+