முற்றுப்புள்ளி வைத்த ‘ஜென்டில்மேன்’! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு

Subscribe to Oneindia Tamil

மும்பை: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவரது இந்த திடீர் முடிவு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வில்லியம்சன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை இத்துடன் நிறைவு செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்துப் பேசிய முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட் ஓய்வு குறித்து நான் கடந்த சில நாட்களாகவே ஆழமாகச் சிந்தித்து வந்தேன்.

Kane Williamson

இறுதியில், சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்ற தெளிவான முடிவுக்கு வந்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது 100% உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளேன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதும் இருக்கும். எனது சொந்த விருப்பத்தின் பேரில், மனநிறைவோடு சர்வதேச களத்திலிருந்து விடைபெறுவதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

தற்போதைய நியூசிலாந்து அணியில் திறமையான பல இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு மிகச் சிறப்பாக எடுத்துச் செல்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த அணி எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமான ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல் என்றால், அது 2021-ல் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி வென்ற முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தான். இந்திய அணிக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் அணியை வழிநடத்தி அவர் கோப்பையை வென்றுகொடுத்தார்.

மேலும், இவரது தலைமையின் கீழ் 2019 உலகக்கோப்பை தொடரிலும் நியூசிலாந்து இறுதிப்போட்டி வரை முன்னேறியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 110 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 33 சதங்கள், 38 அரைசதங்கள் உட்பட 9,515 ரன்களை குவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை வில்லியம்சன் வசம் இருக்கிறது.

கடந்த 16 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், களத்தில் தனது அமைதியான குணத்தாலும், நேர்மையான ஆட்டத்தாலும் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்ற 'ஜென்டில்மேன்' கேன் வில்லியம்சன் ஓய்வு பெற்றுள்ளது கிரிக்கெட் உலகின் ஒரு பொற்காலத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+