அறிவாலய மியூசிக்கில் கலக்கிய சிலுவம்பாளையம் டான்ஸ்! திமுக, அதிமுகவை ஒரே வரியில் சாய்த்த தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்துப் பொறாமைப்பட்டு, திமுகவும் அதிமுகவும் தேவையில்லாமல் பொய்ப் புகார்களைக் கூறி வருவதாகத் தமிழக வெற்றிக் கழகம் காட்டமாக தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி என்றும் தவெக தனது அறிக்கையில் சாடியுள்ளது.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தவெக அரசு, திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

Siluvampalayam Dance

உதயநிதி ஸ்டாலின் காட்டம்

"தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாகப் பொய்க் கதைகளைக் கூறிய தற்போதைய முதலமைச்சர் விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகளாகப் பெரும் பட்டியலை வாசித்துள்ளார்.

இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம், 42 சதவீத உழைக்கும் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சி ஆகியவை ஒரு மாத கால 'சோபா மாடல்' ஆட்சியில் வந்தவை அல்ல, மாறாக திமுகவின் 5 ஆண்டு கால 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள்.

நீட் மட்டும்தான் உலகமா?

நீட் மட்டும்தான் உலகமா? என்று தேர்தலுக்கு முன் கேட்ட தவெக அரசு, தற்போது நீட் விலக்கு கேட்டுத் தனது பழைய பேச்சுக்குத் தானே மறுப்பு தெரிவிக்கிறது, மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசிடம் "நமக்கெதுக்கு வம்பு" என்று வாய் திறக்காமல் முதலமைச்சர் திரும்பிவிட்டார்" என்றெல்லாம் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி இப்படி கொந்தளித்து விமர்சித்த சில மணி நேரங்களிலேயே, தவெகவின் ஐடி விங் களமிறங்கி, உதயநிதியின் விமர்சனங்களை அப்படியே சுக்குநூறாக உடைக்கும் வகையில், ஒரு காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவெக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்:

தவெக ஐடி விங் பதிலடி

"ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்டவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க இயலாது, இது மாடர்ன் மனுநீதிச் சோழனாக விளங்கும் முதலமைச்சர் விஜய்யின் அரசு.

பொள்ளாச்சி சம்பவம் போல நீதியைக் குழிதோண்டிப் புதைக்காமல், தவறு செய்தவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும் தண்டிப்பது உறுதி. அதே நேரத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாத நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான முறையிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி டான்ஸ்

ஆனால், தவெக அரசின் மீதான மக்கள் ஆதரவையும் இந்த நல்ல புரிதலையும் சகித்துக்கொள்ள முடியாமல் தான் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளும் பொறாமையில் பொய்ப் புகார்களைக் கூறி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகச் சம்பவத்தில் உள்ள உண்மைகளை மறைத்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார், அறிவாலயத்தின் அறிக்கைகளுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி நடனமாடுகிறார்.

ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் சித்தரஞ்சன் சாலை (திமுக) மற்றும் சிலுவம்பாளையம் (அதிமுக) கூட்டணி அமைத்துக் கொண்டு, கடந்த மே 4-ஆம் தேதிக்குப் பிறகு காமெடி மற்றும் காண்டு அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்பினால் மக்கள் அவர்களை முழுமையாகப் புறக்கணிப்பார்கள்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.

தவெக - திமுக மோதல்

ஆக, இந்த அதிரடி அறிக்கையின் மூலம் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரிகிறது.. தமிழக அரசியலில் திமுக - தவெக இடையேயான மோதல், இனி மறைமுகப் போர் கிடையாது, அது முற்றிலும் வெளிப்படையான, நேரடி மோதலாக அதிகாரப்பூர்வமாக மாறிவிட்டது!

தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைத்த பிறகும் கூட, இரு தரப்பும் ஒருவரையொருவர் "தீய சக்தி", "சோபா மாடல்" என தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்து கொள்வது, பரபரப்பையும், அதிர்வலையையும் உண்டுபண்ணி வருகிறது.. இனி வரும் நாட்களில் இந்த மோதல் எங்கே போய் முடியப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+