தனிமரமான திமுக.. கூட்டணியை செதில் செதிலாக பிரித்த தவெக! விஜய் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்! ஷாக் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுவது, திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் திடீரென தவெக கூட்டணிக்கு மாறியிருப்பதுதான். இதன் பின்னணியில் தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட அரசியல் முக்கியத்துவம், தேர்தல் வியூகங்கள் உள்ளிட்ட பல காரணிகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். இந்நிலையில் பத்தாண்டுகளாக தொடர்ந்த திமுக கூட்டணியை உடைத்தது விஜய்யின் திட்டமிட்ட ப்ளான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழக அரசியல் எப்போதும் திராவிட கட்சிகளை மையமாக கொண்டே சுழன்று வந்தது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் காலகட்டத்தில் தமிழக அரசியல் பெரும்பாலும் திமுக - அதிமுக என்ற இரு அணிகளைச் சுற்றியே இயங்கியது.

DMK Alliance Cracks

இடைக்கிடையே அவ்வப்போது மூன்றாவது அணி உருவானாலும், அவை பெரிய தேர்தல் வெற்றியைப் பெறவில்லை. இதனால், பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர கட்சிகள் இந்த இரு கட்சிகளும் தலைமை தாங்கிய கூட்டணிகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது வழக்கமாக இருந்தது.

திமுக கூட்டணி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்ததால், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக அணியில் தொடர்ந்து பயணித்தன. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு தேர்தல்களில் இந்த கூட்டணி ஒன்றாகவே செயல்பட்டது. இந்நிலையில் தான் திமுக கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே தொடங்கியது. அப்போது இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக ஆகியவற்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

காங்கிரஸ்

காங்கிரஸுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு குறைவான தொகுதிகள் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஆட்சியில் இருந்தபோது கூட்டணிக் கட்சிகள் முன்வைத்த பல கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் உருவான பிறகு, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளை தனது அணிக்குள் கொண்டு வர விஜய் முயற்சி மேற்கொண்டார்.

கூட்டணிக் கட்சிகள்

இருப்பினும், தேர்தலுக்கு முன்பு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி திமுக தனது கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், பின்னர் நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் மீண்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்பார்த்த அளவு இடங்கள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி வெளிப்பட்டது. தேர்தல் களத்திலும் இந்த அதிருப்தி எதிரொலித்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்,

தவெக ஆட்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியமைத்த பிறகு, காங்கிரஸ் முதலில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது. அதன்பின் இடதுசாரி கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவை உறுதிப்படுத்தின. பின்னர் மதிமுகவும் தவெக அணியில் இணைந்தது. தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி மாற்றத்திற்குப் பிறகு திமுக மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.

ஆதவ் அர்ஜுனா

முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் சில தலைவர்கள், "திமுக ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது" என்று விமர்சித்து வருகின்றனர். மறுபுறம், திமுகவும் முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், "கூட்டணிக் கட்சிகளிடம் திமுக சமமான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதே அவர்கள் வெளியேற காரணம்" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

தவெக கூட்டணி

அதேநேரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த ஐந்து ஆண்டுகளும் விஜய்தான் முதல்வராக இருப்பார்" என்று கூறியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுடன் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அதனை திமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, தவெக தனது கூட்டணியை எப்படி தக்க வைக்கப் போகிறது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+