“ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு மாநில உரிமைகளை Compromise செய்துள்ளது தவெக அரசு”.. உதயநிதி காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்." என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த செயலை எதிர்க்கட்சியான திமுக கண்டித்துள்ளது.

Udhayanidhi stalin

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.

அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த சோஃபா மாடல் அரசிற்கும் கடும் கண்டனங்கள். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.

ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+