வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

2011- 2016 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். தற்போது ஒரத்தநாடு சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் வைத்திலிங்கம், அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு பதியப்பட்டது.

Vaithilingam

சென்னை பெருங்களத்துரில், 2016 அம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியார் நிறுவனம் அனுமதி கோரியது. அப்போது, அதிமுக ஆட்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 2024 செப்டம்பர் 24ஆம் தேதி திமுக ஆட்சியில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான முத்தம்மாள் நிறுவனம் மீதும் மேலும் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்ப்பட்டது.

ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், வைத்திலிங்கம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி திமுகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 25ல் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை கைவிடுவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறப்போர் இயக்கம், அமலாக்கத்துறை தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகக் கூறி மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்கிற்கும் அமலாக்கத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத் துறையின் மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்த நீதிபதி, அனைத்து மனுக்களின் மீதான விசாரணையையும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+