கட்டா குஸ்தி 3வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வமான வசூல் இதுதானாம்! அப்போ அது பொய்யா?
சென்னை: படம் ரிலீஸுக்கு முன்பே சர்ச்சை. ரிலீஸான பிறகு சமூக வலைதளங்களில் நெகடிவ் விமர்சனங்கள். ஆனாலும் தியேட்டரில் ரசிகர்கள் வேறு மாதிரி தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இப்போது 'கட்டா குஸ்தி 2' படத்தின் வசூல் மூலம் தெரிய வந்திருக்கிறது.
செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2', ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகம் போலவே இந்தப் படத்திற்கும் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கட்டா குஸ்தி வசூல் நிலவரம்
இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்து படம் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது.
இந்தப் படம் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் பரபரப்பு உருவானது. படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசிய சில கருத்துகள், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து சில சமூக வலைதள பக்கங்களில் படத்திற்கு எதிராக நெகடிவ் பதிவுகள் தொடர்ந்து வெளியானது.
"படத்தை புறக்கணிக்க வேண்டும்" என்ற ஹேஷ்டேக்குகளும் ஒரு கட்டத்தில் வைரலானது. ஆனால் தியேட்டருக்குள் சென்ற ரசிகர்களின் கருத்து வேறு மாதிரியாக இருந்தது.

விளம்பரம்
முதல் நாளிலேயே படம் பார்த்த குடும்ப ரசிகர்கள், "முதல் பாகத்தின் கனெக்சனை இந்தப் படமும் காப்பாற்றியிருக்கிறது" என்று பாராட்ட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் தியேட்டர்களில் கூட்டம் இன்னும் அதிகரித்ததாக திரையரங்கு வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக பெண்கள், குடும்பங்கள், குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப சென்டிமென்ட் + காமெடி
முதல் பாகத்தில் கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து கதை நகர்ந்தது.இரண்டாவது பாகத்தில் அதையும் தாண்டி, குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் பொறுப்பு, குடும்பத்தில் ஏற்படும் புரிதல் குறைவு போன்ற விஷயங்களை காமெடியுடன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்ல அய்யாவு. இதனால்தான் படம் எல்லா வயதினரிடமும் கனெக்ட் ஆகி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர்களின் நடிப்பு
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி வழக்கம்போல தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், இந்த முறை அதிகம் பேசப்படுபவர்கள் இருவர். ஒருவர் மோக்ஷா. சின்ன கதாபாத்திரமாக வந்தாலும், திரையில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
மற்றொருவர், விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம். கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரின் காமெடியும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

வசூல்
ஒரு படம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சமூக வலைதள பதிவுகள் முடிவு செய்வதில்லை. அதை முடிவு செய்வது தியேட்டருக்கு டிக்கெட் வாங்கி வரும் ரசிகர்கள்தான்.
அந்த வகையில், மூன்று நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தெளிவாக காட்டுகிறது. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் அதிகரித்ததும், வார இறுதி நாட்களில் குடும்ப ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு வந்ததும் இந்த வசூலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications