Katta Kusthi 2 Day 2 Box Office: அடேங்கப்பா! கட்டா குஸ்தி 2 வது நாள் வசூல் இவ்வளவா? மாஸ் காட்டும் விஷ்ணு விஷால் படம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெரிய ஹீரோ படம் ரிலீஸானால்தான் தியேட்டர்ல கூட்டம் இருக்கும் என்ற கணக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. நல்ல கதை இருந்தா, குடும்பமாக உட்கார்ந்து பார்க்கக்கூடிய படம் இருந்தா மக்கள் கண்டிப்பா தியேட்டருக்கு வருவாங்க என்பதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது 'கட்டா குஸ்தி 2'.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், முனீஸ்காந்த், மோக்ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம், முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை வாங்கியது. ஆனால் பலரும், "ரிவ்யூ நல்லா இருக்கு... வசூல்ல என்ன பண்ணும்னு பார்ப்போம்" என்றுதான் காத்திருந்தார்கள்.

Katta Kusthi 2 Vishnu Vishal Aishwarya Lekshmi

கட்டா குஸ்தி வசூல் நிலவரம்

ஆனா, இரண்டாவது நாளே அந்த சந்தேகத்துக்கே பதில் சொல்லிட்டது. சாக்விக் வெளியிட்ட தகவல்படி, முதல் நாளில் 2.70 கோடி ரூபாய் வசூலித்த படம், இரண்டாவது நாளில் ஒரே ஜம்ப் அடித்து 4.75 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு நாட்களில் 7.45 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது படக்குழுவுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

விஷ்ணு விஷால் படம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது ரசிகர்கள் மட்டும் பார்த்து ஓடும் படம் இல்லை. குடும்பமாக, கணவன்-மனைவி, குழந்தைகளோடு வந்து பார்க்கும் கூட்டம்தான் அதிகமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரமே சொல்கிறது. அதனால்தான் முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் இவ்வளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.

முதல் பாகத்தில் குஸ்தியை பின்னணியாக வைத்து கணவன்-மனைவி உறவை பேசிய இயக்குநர், இந்த முறை குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் மனநிலை, குடும்பத்துக்குள் பேசப்படாத சின்ன சின்ன ஈகோ, புரிதல் இல்லாமை போன்ற விஷயங்களை காமெடியோடு சொல்லியிருக்கிறார். அதனால்தான் படம் முடிந்து வெளியே வருபவர்களில் பலரும், "இது எங்க வீட்டுல நடந்த மாதிரி இருக்கு" என்று பேசிக்கொண்டு வெளியே வருகிறார்கள்.

Katta Kusthi 2 Vishnu Vishal Aishwarya Lekshmi

குழந்தை நட்சத்திரம் நடிப்பு

இந்தப் படத்தின் இன்னொரு பெரிய ஆச்சரியம் குழந்தை நட்சத்திரம் ஸாராதான். சின்ன பொண்ணு என்றாலும், எமோஷனல் காட்சிகளில் கூட பெரிய நடிகர்களுக்கு ஈடாக நடித்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள்தான் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அதேபோல், இந்தப் படத்தில் புதிதாக இணைந்திருக்கும் நடிகை மோக்ஷாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக ஸ்கூல் டீச்சர் ஆக வரும் சில காட்சிகளில் அவர் ஸ்கிரீன் ப்ளே குறைவாக இருந்தாலும், அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது. "இவர் யார்?" என்று பலரும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் படத்திலேயே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது அவருக்கும் நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

கட்டா குஸ்தி 2 நடிகர்கள்

கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த் கூட்டணி வரும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை குறைக்கவே விடவில்லை. அதே நேரத்தில் ரம்யா கிருஷ்ணன் வரும் காட்சிகள் கதைக்கு இன்னொரு பலமாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மீது விஷ்ணு விஷாலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்த நம்பிக்கைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. படம் ரிலீஸாகும் முன்பே இயக்குநர் செல்லா அய்யாவுக்கு கார் பரிசாக கொடுத்து, "இந்தப் படம் கண்டிப்பா ஜெயிக்கும்" என்று சொன்னார். அப்போது அது ஓவர் நம்பிக்கை என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் இரண்டு நாட்களிலேயே வந்திருக்கும் வசூல் நிலவரத்தை பார்த்த பிறகு, அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்பதுதான் இப்போது கோலிவுட்டில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

இன்று விடுமுறை என்பதால் தியேட்டர்களில் முன்பதிவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதே வேகத்தில் கூட்டம் நீடித்தால், முதல் வார முடிவுக்குள் 'கட்டா குஸ்தி 2' விஷ்ணு விஷாலின் கேரியரில் இன்னொரு முக்கிய ஹிட் படமாக மாறும் என்ற நம்பிக்கை திரையுலகில் அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+