6 வயது சிறுமி லக்ஷனாவுக்கு இதய அறுவை சிகிச்சை.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லக்ஷனா, உயிர்காக்கும் இதய சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படும் நிலையில் உள்ளார். ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அவர் சிகிச்சையில் படுத்த படுக்கையாக இருக்கிறார். உங்களால் முடிந்த உதவியை அவருக்காக நீங்கள் செய்யுங்களேன்!
அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் லக்ஷனாவுக்கு பள்ளியில் நடைபெற்ற வழக்கமான மருத்துவப் பரிசோதனையில்.. அவருக்கு இதயப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் MIOT மருத்துவமனை நடத்திய இலவச இதய பரிசோதனை முகாமில் அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் லக்ஷனாவுக்கு Patent Ductus Arteriosus (PDA) எனப்படும் பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், பிறந்த பிறகு இயல்பாக மூடப்பட வேண்டிய ரத்த குழாய் திறந்த நிலையிலேயே இருப்பதால், எதிர்காலத்தில் இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அடிக்கடி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது அவருக்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க உடனடியாக PDA Device Closure சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மருத்துவமனையில் அனுமதி, பரிசோதனைகள், மருந்துகள் உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து ரூ.1.40 லட்சம் தேவைப்படுகிறது.

லக்ஷனாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் வாழ்கிறது. அவரது தந்தை தினக்கூலி விவசாயத் தொழிலாளியாக பணியாற்றுகிறார். வேலை கிடைக்கும் நாட்களில் மட்டுமே சுமார் ரூ.500 வருமானம் கிடைக்கிறது. மேலும், அவருக்கு பேச்சு மற்றும் காது கேளாமை குறைபாடும் இருப்பதால், வேலை வாய்ப்புகளும் குறைவாக உள்ளன.
தாயார் ஆஷா, செல்போன் பேக்கிங் நிறுவனத்தில் மாதம் சுமார் ரூ.13,000 சம்பளத்தில் பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வருகிறார். குடும்பத்தின் அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய போராடும் நிலையில், ரூ.1.40 லட்சம் திரட்டுவது அவர்களால் இயலாத ஒன்றாக உள்ளது.

இதனால் பொதுமக்களிடம் லக்ஷனாவின் குடும்பம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிய தொகையாக இருந்தாலும் ஒவ்வொரு நன்கொடையும் லக்ஷனாவின் உயிரைக் காக்க உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications