செங்கோட்டையன் தந்த ஸ்வீட் தகவல்.. பட்டா வாங்குவதில் இனி இந்த 'டார்ச்சர்' இல்லை! அடடா வெறும் 15 நாளா?
சென்னை: சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக இடம் வாங்குபவர்களுக்கும் எப்போதுமே ஒரு பெரிய கவலை இருக்கும். அதுதான் அந்த நிலத்துக்கு பட்டா வாங்குவது. "அரசு அலுவலகங்களுக்கு எத்தனை முறை அலைவது, எப்போதுதான் பட்டா கைக்கு வரும்?" என்று பொதுமக்கள் தவித்து வந்த நிலைக்கு, இப்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பட்டா மாறுதலை பொறுத்தவரை, விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் தேங்குவது முதல் முக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது.. குறிப்பாக நிலத்தை பிரித்து வாங்கும் போது நில அளவையர்கள் அளப்பதில் பெரும் தாமதமும், பழைய ஆவணங்களைச் சரிபார்ப்பதில் கடுமையான குழப்பங்களும் நீடித்து வருகின்றன.

பட்டா மாறுதல் சிக்கல்கள்
மேலும் பெயர் மற்றும் இனிஷியலில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் விண்ணப்பங்கள் உடனே நிராகரிக்கப்பட்டதோடு, கள ஆய்விற்காக அதிகாரிகள் பொதுமக்களைப் பலமுறை அலைக்கழித்ததால் லஞ்சப் புகார்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் தேங்குவதுடன், நிலத்தைப் பிரித்து அளப்பதிலும் பழைய ஆவணங்களைச் சரிபார்ப்பதிலும் கடுமையான காலதாமதமும் குழப்பமும் ஆங்காங்கே நீடிப்பதாக சொல்கிறார்கள்.. மேலும், கள ஆய்விற்காக அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்ததால் லஞ்சப் புகார்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுக்கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னையில் உள்ள எழிலகம் வளாகத்தில் பட்டா மாறுதல் குறித்து முக்கிய ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் சேர்ந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல்களை ஆன்லைன் மூலமாக எப்படி மிக வேகமாகவும், தானியங்கி முறையிலும் பொதுமக்களுக்கு வழங்கலாம் என்பது குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அமைச்சர், ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாகவும் தெரிகிறது.
15 நாட்களுக்குள் இறுதி முடிவு
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் இதுகுறித்து பேசும்போது, "பட்டாக்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது என்பதைத் தவிர்க்கும் வகையில், அதனை விரைந்து வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. இனிமேல் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், அடுத்த 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்க அரசு முயற்சி செய்து வருகிறது" என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவால், பட்டா மாறுதலுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். துறையின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து பேசிய பிறகு, இந்த பணிகளை மிக விரைவாக மேற்கொள்ள தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. இனி அதிகாரிகள் சொன்னபடி 15 நாட்களுக்குள் வேலையை முடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications