கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுகவின் தனித்துவத்தை நிலைநாட்டப் போராடும் டி.டி.வி.தினகரனின் தற்போதைய அதிரடிப் பேட்டி ஒன்று புதிய விவாதங்களை அரசியல் களத்தில் கிளப்பியுள்ளது. அதிமுக உடனான இணைப்பு குறித்து தினகரன் சொல்லி உள்ள கருத்தும், பாஜகவின் கூட்டணி வியூகங்கள் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்தும் மிகுந்த கவனம் பெற்று வருகிறது. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

அமமுக பொதுச்செயலர் தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது, "சட்டசபை தேர்தலுக்கு பிறகு, சில நிர்வாகிகள் தங்கள் சொந்த காரணங்களுக்காக அமமுகவை விட்டு விலகியுள்ளனர். அவர்கள் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டதாக சொல்வது பொய். அவர்களுக்கு பிறகு கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

TTV Dinakaran AMMK BJP Tamil Nadu Politics political speculation alliance politics NDA alliance breaking political news

அமமுக - அதிமுக இணையுமா

ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காக, எங்களுக்குள் இருந்த மன வருத்தங்களை மறந்து, சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம்.

கூட்டணி தர்மப்படி, தேர்தலுக்கு பின்னரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுகவுக்கு உறுதுணையாக உள்ளோம்... அதிமுக, அமமுக இணைய வேண்டும், அதற்கு இது தான் சரியான நேரம் என்று பலர் சொன்னாலும் கட்சி நிர்வாகிகள் இது குறித்து என்னிடம் பேசவில்லை. அமமுக என்றைக்கும் தனித்துவமான இயக்கமாக தொடர்ந்து செயல்படும்.

டிடிவி தினகரன் கெத்து

விவசாய கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளில், மக்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏமாற்றி உள்ளனர். மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு, ஆட்சியாளர்கள் காலம் கடத்துகின்றனர். இதனால் இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆட்சி என்று மக்கள் விமர்சிக்கிறார்கள். இது ஒன்றும் புதிய ஆட்சியாக தெரியவில்லை. திமுக அரசின் நீட்சியாக உள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்று என, நினைத்துக் கொண்டு ஒரு பேராபத்தை மக்கள் கொண்டு வந்துள்ளனர். தவெக அமைச்சர்கள் முதல், அனைத்து நிர்வாகிகளின் செயலும் அப்படித்தான் உள்ளது" என்றார் தினகரன்.

தினகரன் தந்துள்ள இந்த பேட்டியானது, அதிமுக மற்றும் அமமுக இணைப்பு குறித்த அனைத்து ஊகங்களுக்கும் மிகத் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

அதிமுகவுடன் அமமுக எப்போதும் இணையாது, அது என்றைக்கும் தனித்துவமான இயக்கமாகவே செயல்படும் என்று தினகரன் திட்டவட்டமாக சொல்லியிருப்பது, அவர் தன் அரசியல் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

அமமுகவை கண்டுக்கலையா பாஜக

தினகரன் ஒருபுறம் "கூட்டணி தர்மம்" என்று பேசி பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் தான் உறுதுணையாக இருப்பதாகக் குறிப்பிட்டாலும், தமிழக அரசியல் களத்தில் பாஜக அவரைத் திட்டமிட்டே கைகழுவி வருகிறதோ என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம் என்று முழங்கிய தினகரன், இன்று டெல்லி தலைமையின் சமரசப் பேச்சை நம்பி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது அவரது சொந்தக் கட்சிக்கே பூஜ்ஜிய பலனைத் தந்துவிட்டது எனலாம்.

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மன்னார்குடியில் வென்ற ஒரேயொரு எம்.எல்.ஏ காமராஜும் இப்போது ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தாவியதால் அமமுக நிலைகுலைந்துள்ளது. இந்தச் சூழலில் தான், தவெக அரசு மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆளுநரிடமும் போலீசிலும் தினகரன் ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

சொந்த பலத்தில் அமமுக அதிரடி

ஆனால், இந்த விவகாரத்தை அன்று சிபிஐ இயக்குநரிடம் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டிருந்த போதும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து எந்தவொரு அரசியல் ஆதரவோ அல்லது ஒத்துழைப்போ கிடைக்கவில்லையாம்.

மத்திய அரசும், ஆளுநரும் இந்த புகார்கள் மீது காட்டும் மெத்தனம்தான், தினகரனை பாஜக முழுமையாகக் கைவிட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஒருபக்கம் டெல்லியின் ஆதரவும் இல்லாமல், மறுபக்கம் தமிழகத்தில் போதிய பலமும் இல்லாமல் அமமுக தனித்துவிடப்பட்டுள்ள சூழலில், தவெக அரசை "இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆட்சி" என்றும், "மக்களுக்கு வந்த பேராபத்து" என்றும் தினகரன் மிக ஆக்ரோஷமாக விமர்சிப்பது, அவர் பாஜகவின் தயவை எதிர்பாராமல் தன் சொந்த பலத்தில் மட்டுமே இனி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+