பாரதிராஜாவின் 30வது நாள் நினைவேந்தலுக்கு வராத மருமகள்.. முன் நின்று காரியம் செய்த சீமான்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனால் அவரைப் பற்றிய நினைவுகளும், அவருடைய குடும்பத்தை சுற்றி விவாதங்களும் இன்னும் சமூக வலைத்தளத்தில் குறையவில்லை. தேனி மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் இன்று பாரதிராஜாவின் 30 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

பாரதிராஜா கடந்த ஜூன் 10ஆம் தேதி 2026 அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவின் கிராமிய மண் வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குனர் பாரதிராஜாவுக்காக அரசு மரியாதை உடன் தேனி மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 30 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி அந்த இடத்தில் நடைபெற்றது.

Bharathiraja Seeman Tamil Cinema

பாரதிராஜா 30வது நாள் நினைவேந்தல்

பாரதிராஜா நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள், திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காலையிலேயே வந்து அங்கேயே அமர்ந்திருந்த சீமான் சடங்குகளை முன் நின்று செய்து கொண்டிருந்தார்.

அதுபோல நடிகர் விமல் உட்பட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் மனைவி, மகள் ஜனனி மற்றும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்ட நிலையில் பலருடைய கவனத்தை ஈர்த்த ஒரே விஷயம் அவரது மருமகள் நந்தனாவும் அவருடைய குழந்தைகளும் நிகழ்ச்சியில் காணவில்லை என்பதுதான். இது குறித்து சோசியல் மீடியாவில் பேச தொடங்கி விட்டனர்.

பாரதிராஜா குடும்ப பிரச்சனை

பாரதிராஜாவின் இறுதி அஞ்சலியில் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லையா? என்று கேள்விகள் எழுந்துள்ளது. பாரதிராஜாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது நந்தனா மற்றும் ஜனனி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அதன் அடிப்படையில் இப்போது பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“1000 கோடி சொத்து இல்லை.. கடனோட இறந்த பாரதிராஜா?” மனோஜ் மனைவியிடம் இருந்த ஆவணங்கள்? இயக்குநர் விளக்கம்
ஏற்கனவே ஜனனி மற்றும் நந்தனார் இருவருக்கும் இடையே பிரச்சனை எதற்காக நடந்தது என்று பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் உறவினரும் அளித்த பேட்டி கூட சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் அவர் பேசும்போது, பாரதிராஜா எவ்வளவோ சொத்துகளை சம்பாதித்து இருந்தாலும் மனோஜ் படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடன் கொஞ்சம் அடைக்காமல் இருந்தது. அதற்கான பத்திரம் மனோஜியிடம் இருந்த சமயத்தில் திடீரென மனோஜ் இறந்ததும் அந்த பத்திரங்கள் நந்தனாக கைவசம் போய்விட்டது.

Bharathiraja Seeman Tamil Cinema

கடன் பிரச்சனை

பிறகு அந்த பத்திரங்களை வாங்கி கடனை அடைக்க பாரதிராஜா தரப்பு எவ்வளவோ முயற்சி செய்தும் நந்தனா அதை கொடுக்கவில்லை. அதனால் குடும்பத்தினருக்கு கோபம் இருந்தது. அதேபோல மனோஜ் இறந்த அடுத்த நாள் மனோஜ் அடக்கம் செய்த வீட்டை விட்டு நந்தனா வெளியேறி இன்னொரு வீட்டிற்கு போய்விட்டார் அதுகூட ஜனனிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் நான் சொல்லியிருந்தார்.

பாரதிராஜா இறுதி சடங்கில் நந்தனா–ஜனனி மோதல் காரணம்? சொத்து பிரச்சனை இல்லை! இதுதான்! இயக்குநர் ஓபன்
அதுமட்டுமல்லாமல் பாரதிராஜா இறந்துவிட்டார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு கூட உடனே வராமல் மற்ற உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு தான் வந்தார் அதனால் தான் ஜனனி நந்தனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று கூட அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இது உண்மையா? பொய்யா? என்று நந்தனா தரப்பினர் இன்னும் விளக்கம் கொடுக்காத நிலையில் இது சர்ச்சையாக தான் இருக்கிறது. இப்படியான நிலையில் இப்போது பாரதிராஜா முப்பதாவது நாள் நினைவேந்தலிலும் மருமகள் நந்தனா குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை என்பது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+