பாரதிராஜா இறுதி சடங்கில் நந்தனா–ஜனனி மோதல் காரணம்? சொத்து பிரச்சனை இல்லை! இதுதான்! இயக்குநர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு பிறகு, அவரது குடும்பத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாரதிராஜாவின் இறுதி சடங்கில் அவரது மருமகள் நந்தனா கலந்து கொண்டபோது, மகள் ஜனனி அவரை கையைப் பிடித்து எழுப்பி வெளியே அனுப்பியதாக சில வீடியோக்கள் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

இந்த சம்பவத்துக்கு பின்னால் குடும்ப சொத்து பிரச்சனைதான் காரணம் என்றும், அதனால்தான் குடும்பத்தினர் மனோஜின் மனைவி நந்தனாவை புறக்கணித்தார்கள் என்றும் பலரும் கருத்து கூறினர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் மனோஜ் குமார் விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nandana

இயக்குனர் பேட்டி

அதில் அவர் கூறியதாவது, மனோஜ் மறைந்த பிறகு அவரது உடல் அஞ்சலிக்காக நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, குடும்ப வழக்கப்படி 16-ஆம் நாள் காரியம் அந்த வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று உறவினர்கள் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். அதற்காக மனோஜின் மனைவியும் குழந்தைகளும் அங்கேயே தங்க வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டதாகவும், ஆனால் நந்தனா அதற்கு சம்மதிக்காமல் வேறு வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

பாரதிராஜா மகள் மருமகள் பிரச்சனை

இதுதான் ஜனனிக்கும், மனோஜின் தாயாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாரதிராஜா மறைந்த செய்தி அதிகாலை 3 மணிக்கே நந்தனாவுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனே வீட்டிற்கு வருமாறு சொல்லப்பட்டதாம். ஆனால் அவர் காலை 9 மணிக்குப் பிறகே வந்ததாகவும், அதுவும் குடும்பத்தினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் மனோஜ் குமார் விளக்கமளித்துள்ளார்.

Nandana

இறுதி சடங்கில் நடந்த சம்பவம்

மேலும், பாரதிராஜாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்த வேண்டியிருந்ததால், மாலை 3 மணிக்குள் குடும்ப சடங்குகளை தொடங்க வேண்டும் என்று காவல்துறை மற்றும் அதிகாரிகள் முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்ததாக அவர் கூறியுள்ளார். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும், நந்தனா அன்றும் தாமதமாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், பாரதிராஜாவின் உடல் அருகே அமர்ந்திருந்த நந்தனாவிடம் ஜனனி "ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்?" என்று கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் சொத்து பிரச்சனை எதுவும் வெடிக்கவில்லை என்றும், தாமதமாக வந்தது தொடர்பான குடும்ப கோபமே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் மனோஜ் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

Nandana

இதன் மூலம், இணையத்தில் பரவி வந்த "சொத்து தகராறு" குறித்த பேச்சுகளுக்கு மனோஜ் குமார் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+