ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் மகர ராசி.. இந்த 3 விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மகர ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

aadi-month-zodiac-sign-magaram-will-get-lots-of-good-benefits-in-this-period

சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மகர ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

மகர ராசி பலன்

மகர ராசி மற்றும் லக்னத்திற்கு நிறைய லாபம் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் நன்றாக இருக்கும். வக்கிர சனி இருப்பதால் சோம்பல் அதிகமாக காணப்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் நிறைய முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த விஷயத்தில் இருந்த சிக்கல் தீரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரியத் தடைகள் நிவர்த்தியாகும்.

குடும்பம்

பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம், பழக்கவழக்கங்கள், வண்டி வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு தொந்தரவுகள் வந்து போகும். துணைக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. காதலர்களுக்குள் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மூன்றாவதாக பஞ்சாயத்து செய்யும் நபர்களால் பிரிவுகள் வரும் அமைப்பு.

செல்வாக்கு

உங்களுக்குள் இருக்கும் குடும்பம் மற்றும் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கோபப்படுவது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்தும் நன்றாக இருக்கும்.

பிரம்ம முகூர்த்தம்

பிள்ளைகள், துணை விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. ராகு 3 ஆம் இடத்தில் இருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போடுவது ஏற்றத்தைத் தரும். தனிப்பட்ட முறையில் யோகமும், அனுகூலமும் காணப்படும். குடும்பம், பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.

வழிபாடு

பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான பாக்கியம் ஏற்படும். அம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு, அசிடிட்டி, ஜீரணம், மலக்குடல், கழிவுப் பாதை, முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+