கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா! திடீரென கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஸ்ரீலேகா, தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாஸ்தமங்கலம் வார்டில் பாஜக சார்பில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஸ்ரீலேகா.

kerala councillor

அந்த மாநகராட்சியையும் பாஜகவே கைப்பற்றியது. இதனால் ஸ்ரீலேகாதான் திருவனந்தபுரத்தின் மேயராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வி.வி.ராஜேஷ் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

இதில் ஸ்ரீலேகாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தில், தனிப்பட்ட அசவுகரியங்களால் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதால் மேயர் ராஜேஷ் தெரிவித்துள்லார். ஸ்ரீலேகா ராஜினாமாவால் 101 பேர் கொண்ட மாநகராட்சியில் பாஜகவின் பலம் 51-ல் இருந்து 50-ஆக குறைந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா, 1987 ஆம் ஆண்டு முதல் பெண் ஐபிஎஸ் ஆனார். 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணி செய்த அவர் சிபிஐ, லஞ்ச ஒழிப்பு, தீயணைப்பு படை, மோட்டார் வாகனத் துறை, சிறைத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.

2017ஆம் ஆண்டு கேரளாவின் முதல் பெண் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியில் இருந்த அவர் டிசம்பர் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை கண்டு வியந்து 2024 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

இப்படி முதல் பெண் ஐபிஎஸ், முதல் பெண் டிஜிபி என பதவிகளை பெற்ற ஸ்ரீலேகா, பாஜகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு நழுவி போனது. கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+