போராட்டத்தில் பெண் பத்திரிகையாளரிடம் போலீஸ் அத்துமீறல்.. சிஜேபி வார்னிங்! டெல்லி காவல்துறைக்கு கெடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளரிடம் காவல்துறை அதிகாரி அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி டெல்லியில் பேரணி செல்ல மாணவர் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதேபோல, இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்திற்கு வருவோம் அப்போது சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எப்.ஐ.ஆர் நகல் எங்களுக்கு வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கெடு விதித்துள்ளது.

டெல்லியில் பெண் பத்திரிகையாளருக்கு போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்பினர் இன்று ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Delhi Police

அனைத்திந்திய மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போரா, மற்றும் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ், இடது சாரிகள் மற்றும் மானவர்கள் உள்ளிட்டோர் இணைந்து இன்று டெல்லியில் பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளனர். இந்தியா கேட்டில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி இந்த பேரணியை நடத்த மாணவர் அமைப்பு முடிவு செய்துள்ளது.

தெருவீதிகள் முதல் போராட்ட களம் வரை எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நேஹா போரா குற்றம் சாட்டியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மும்பையில் போராட்டம் நடத்திய நிலையில், அகில இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு டெல்லி காவல்துறை உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகாரளித்த போதும் போலீசார் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ், "இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்திற்கு வருவோம். நேரம் முடிந்துவிட்டது. எங்களுக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் வேண்டும்" என்றார்.

இந்த நிலையில்தான், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி இந்தியா கேட்டில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்து இருப்பதாக மாணவர்கள் அமைப்பு கூறி உள்ளது. இதுதொடர்பாக மாணவர் அமைப்பை சேர்ந்த நேஹா கூறுகையில், "தெரு வீதிகள் முதல் போராட்ட களம் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் போராட்டக்கார்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் போலீஸ் நடத்திய தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாது. இன்று மாலை 4 மணிக்கு ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+