புக் செய்தால் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இனி எல்லாமே மாற போகுது! இந்தியாவில் முதல்முறை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும்போது அல்லது ஆபிஸ் கிளம்பும் பரபரப்பில் சமைக்கும்போது சட்டென கேஸ் காலியானால் நாம் கோபத்தின் உச்சத்திற்குப் போய்விடுவோம். ஆனால், இனி கோபம் வேண்டாம். சிலிண்டரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் புதிய சேவை இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால் என்ன செய்வோம்.. புதிய சிலிண்டர் புக் செய்வோம். அது பொதுவாக டெலிவரி ஆக ஓரிரு நாட்கள் ஆகும். அதுவும் ஹார்முஸ் பஞ்சாயத்து வந்த பிறகு பல வாரங்கள் கூட ஆனது. ஆனால் இனி அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவுள்ளது.

gas lpg LPG gas Cylinder deliver

10 நிமிடங்களில் டெலிவரி

இந்தியாவில் முதல் முறையாக, குவிக் காமர்ஸ் தளத்தின் மூலம் 10 நிமிடங்களுக்குள் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் சேவையை இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இன்ஸ்டாமார்ட் கைகோர்த்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாமார்ட் செயலியில் கேஸ் சிலிண்டரை ஆர்டர் செய்தால், 10 நிமிடங்களுக்குள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

இத்தோது சேர்த்து, இந்துஸ்தான் நிறுவனத்தின் புதிய ஹெச்பி நாவ்யா என்ற 10 கிலோ கேஸ் சிலிண்டரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான சிலிண்டர்களை விட எடை குறைவாக இருப்பதால் இதை எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மேலும், இந்த சிலிண்டர் எளிதாகத் துருப்பிடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, சிலிண்டரை பார்த்தாலே எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்பதைப் பயனர்கள் நேரடியாகப் பார்க்க முடியும்.

பெங்களூர்

இப்போது முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இந்த புதிய 10 கிலோ சிலிண்டர் அல்லது 5 கிலோ சிலிண்டர் என இரண்டில் எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம். இதுவரை காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை நிமிடங்களில் டெலிவரி செய்து வந்த குவிக் காமர்ஸ் தளங்கள், தற்போது கேஸ் சிலிண்டர் டெலிவரியிலும் நுழைந்துள்ளது.

இதில் முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்றால் ஏற்கனவே வீட்டுக்கான கேஸ் இணைப்பை வைத்திருப்போர் தான் இதைக் கட்டாயம் ஆர்டர் செய்ய வேண்டும் என்று இல்லை. யார் வேண்டும் என்றாலும் ஆர்டர் செய்யலாம். இதனால் மாணவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள் சட்டென சிலிண்டரை எளிதாக வாங்க முடியும்.

எப்படி ஆர்டர் செய்யணும்?

இதை ஆர்டர் செய்வதும் ஈஸி. எப்போதும் போல இன்ஸ்டாமார்ட் செயலியை திறந்து, தேவையான சிலிண்டர் ஆப்ஷனை தேர்வு செய்து ஆர்டர் செய்தால் போதும். வெறும் 10 நிமிடங்களில் வீட்டிற்கே சிலிண்டர் வந்துவிடும். முதன்முறையாக வாங்கும்போது மட்டும் உங்கள் ஐடி சரிபார்க்கப்படும். அதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். அதன் பிறகு புதிய சிலிண்டர் வீடு தேடி வரும்.

புதிய சிலிண்டர்

அதன் பின்னர் மீண்டும் சிலிண்டர் தேவைப்படும்போது காலியான சிலிண்டரை டெலிவரி ஏஜெண்டிடம் கொடுத்துவிட்டு புதிய சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம்.. அனைத்து ஆர்டர்களும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமே டெலிவரி செய்யப்படும். மேலும், கேஸ் டெலிவரி செய்வோருக்குத் தேவையான பாதுகாப்பு பயிற்சியும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+