For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பருக்கு பிறகு காங்கிரஸை எப்படியும் ராகுல் 'நிமித்திடுவார்': திக்விஜய் சிங் நம்பிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் கூடுதல் பங்களிப்பை ராகுல் காந்தி மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.. இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு திக்விஜய்சிங் அளித்துள்ள பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சிக்கான ராகுல் காந்தியின் பங்களிப்பு நிச்சயம் தற்போதைய நிலைமையைவிட கூடுதலாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியட்டும். செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். அதற்குப் பிறகு எல்லாம் தெளிவாகத் தெரிந்துவிடும்.

அவரை முன்னரே முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவந்திருந்தால் ஊடகங்கள் விமர்சிக்கும். ஆனால் கட்சியில் ராகுலின் பங்களிப்புக்கான தேவை உருவாகியுள்ளது. இதுவே சரியான தருணம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவருமே ராகுலின் கூடுதல் பங்களிப்பையே எதிர்பார்க்கின்றனர். விரும்புகின்றனர். கட்சியினரின் கருத்தையே சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் வெளிப்படுத்தியிருந்தார் என்றார் அவர்.

English summary
Amid the growing chorus surrounding Congress General Secretary Rahul Gandhi's impending entry into active politics, party leader Digvijaya Singh said the Congress heir-apparent is set to take the big leap soon after the presidential and vice-presidential polls conclude.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X