For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து ஷோரும்கள் மூலம் கால் பதிக்க வரும் பிளிப்கார்ட் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஆன்லைன்' வழியாக வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ‘பிளிப்கார்ட்' நிறுவனம் தற்போது இந்தியாவில் ஷோரூம்களை தொடங்கி நேரடி சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இணையவழி பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தள நிறுவனம் பிளிப்கார்ட். அவ்வப்போது செல்போன்கள், பேக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பல அதிரடி தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. சமீபத்தில் 'பிக் மில்லியின் டே சேல்ஸ்' என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையின் மூலம் சுமார் 30 கோடி டாலர்கள் அளவுக்கு விற்பனையை குவித்தது. இதில், சுமார் 20 கோடி டாலர்கள் செல்போன்கள் விற்பனை மூலமாக மட்டும் கிடைத்துள்ளது.

flipkart has decided to start show rooms in india

இந்நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் புதிய ஷோரும்களை திறக்க உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். அதில் முதல் கட்டமாக செல்போன்களை காட்சிக்கு வைக்கவும் முடிவு செய்துள்ளது. அவற்றை வாங்க விரும்புபவர்கள், தங்களுக்கு தேவையான செல்போன்களை நேரில் தொட்டுப்பார்த்து, அவற்றின் செயல்திறன், வேகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை ஆய்வு செய்து, பின்னர் தங்களது ஆர்டர்களை ‘பிளிப்கார்ட் ஆப்ஸ்' வழியாக முன்பதிவு செய்து, அதே ஷோரூம்களிலோ, அல்லது, வழக்கம்போல் கூரியர் மூலமாகவோ டெலிவரி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.

English summary
online trader Flipkart has decided opened show rooms in india's biggest city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X