For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு அஞ்சலி: வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாரணாசி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஜனாதிபதி அப்துல் கலாம் திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Abdul Kalam's Funeral: Special Ganga Aarati at Varanasi as tribute to Kalam

இதையடுத்து, அப்துல் கலாமின் உடல் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் அப்துல் கலாமின் உடலுக்கு, நாளை இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. அப்துல் கலாமின் மறைவுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வாரணாசியில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

English summary
A day after Dr Abdul Kalam passed away in Shillong, his body arrived in Delhi from Guwahati. His body will be flown today to Rameshwaram for the final rites. Special Ganga Aarti performed to pay tribute to late Former President APJ Abdul Kalam in Varanasi.
Read in English: (Live) Dr Kalam's funeral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X